சூடானில் இருக்கும் தூதரக அதிகாரிகளை மீட்க வேண்டும் – அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு

சூடான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை பாதுகாப்புடன் மீட்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில்…

சூடான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை பாதுகாப்புடன் மீட்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே காணப்பட்ட மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. இதனால் ராணுவம், துணை ராணுவத்தினர் ஆங்காங்கே குழுக்கள் குழுக்களாக சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூடானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சூடானில் நடந்து வரும் கொடூர வன்முறை ஏற்கனவே நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பலிவாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : டூ ப்ளெசிஸ் – மேக்ஸ்வெல் வெறியாட்டம்… – ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்கள் இலக்கு!

சூடானில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறியுள்ள அவர், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தூதர பணியாளர்களை பாதுகாப்புடன் மீட்க அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மீட்புப் பணி தொடர்பான அறிக்கையை அமெரிக்க ராணுவத்திடம் இருந்து எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த ஜிபூட்டி, எத்தியோப்பியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.