முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி திரௌபதி இன்று உரையாற்றுகிறார்!

குடியரசு தினத்தையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார். 

நாடு தனது 74-வது குடியரசு தினத்தை நாளை கோலாகலமாக கொண்டாடுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று உரை ஆற்றுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை விடுத்த அறிக்கையில், “நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 25ம் தேதி இரவு 7 மணிக்கு உரை ஆற்றுகிறார். இதை அகில இந்திய வானொலி தனது அனைத்து அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்புகிறது. இதே போன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்தியிலான இந்த உரையைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வரும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், தூர்தர்ஷன் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் ஜனாதிபதியின் உரையை ஒளிபரப்பும். அகில இந்திய வானொலியிலும் இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை ஒலிபரப்பாகிறது.

குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவி ஏற்ற பிறகு குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’பொன்னியின் செல்வனை’ ஏன் தொடங்கவில்லை எம்.ஜி.ஆர்?

Halley Karthik

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.75 கோடி போதை பொருள் பறிமுதல்

G SaravanaKumar

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியாகிறது

G SaravanaKumar