முக்கியச் செய்திகள் தமிழகம்

தேர்தலில் யார் போட்டியிட்டாலும் இ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெறுவார் -அமைச்சர் முத்துச்சாமி

தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், யார் போட்டியிட்டாலும் இளங்கோவன் வெற்றி பெறுவார் என அமைச்சர் முத்துச்சாமி என அமைச்சர் முத்துச்சாமி பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சியினர் நான்காவது நாளாகப்
பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தினமும் மாலை வேலைகளில் பிரச்சாரத்தில்
ஈடுபட்டு வரும் திமுக கூட்டணியினர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரப்பாலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமைச்சர் முத்துசாமி தலைமையில் கூட்டணி கட்சியினர் கைகளில் கொடிகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் போது அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றோம் என தெரிவித்தார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றது எனவும், நிதி நிலை பற்றாக்குறை இருந்தும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே திட்டங்களை நிறைவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார். இது வரை அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது, பல திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது என தெரிவித்த அவர், ஈரோடு மாவட்ட மக்களுக்கு 85 திட்டங்கள் இந்த ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இரு பேருந்து நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப் பட்டுள்ளது எனவும், சென்னி மலை
பகுதியில் மிகப்பெரிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட இருக்கின்றது எனவும்
தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சிக்குள் நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றது, அவற்றைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும், ஈரோட்டிற்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் துவங்கும் வேளையில் தேர்தல் வந்திருக்கின்றது எனவும், தேர்தல் முடிந்த பின் பணிகள் துவங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சொத்துவரி சீர் செய்ய ஆய்வும் நடத்து வருகின்றது என தெரிவித்த அவர், தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், யார் போட்டியிட்டாலும் இளங்கோவன் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார். கமலஹாசனைப் பழக்கத்தின் காரணமாக ஈவிகேஎஸ் சந்தித்து இருக்கின்றார் எனவும், அவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனரா அல்லது யாரையாவது நிறுத்துகின்றனரா என்பது தெரியாது, ஆனால் எதையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேசிய விருதுபெற்ற பிரபல இயக்குநர் காலமானார்!

EZHILARASAN D

திருடப்பட்ட கவரிங் செயினை தங்கம் என்று போலீசில் புகாரளித்த பெண்!

ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றி வந்த மினி லாரி வெடித்து விபத்து

G SaravanaKumar