முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

ராணியின் இறுதிசடங்கில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடந்து நாளை நடபெற உள்ளநிலையில், இதில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இங்கிலாந்து சென்றடைந்தார்.

 

இங்கிலாந்தின் ராணி 2-ம் எலிசபெத் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து 13-ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ராணியின் உடலை மன்னர் சார்லசும், ரா கமிலாவும் பெற்று கொண்டனர். பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராணியின் உடல் வைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

நாள்தோறும் ஏராளமானோர் குவிந்து ராணி எல்சபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.

லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் நேற்று இரவு விமானம் மூலம் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றார்.

 

இன்று அதிகாலை லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைந்த அவரை இந்திய தூதர்கள் வரவேற்றனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை நடைபெற உள்ள ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரூ.1 லட்சம் உதவி ; தனுஷுக்கு நன்றி கூறிய போண்டா மணி

EZHILARASAN D

திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்

Gayathri Venkatesan

ஜப்பானில் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை!

Niruban Chakkaaravarthi