முக்கியச் செய்திகள் உலகம்

எல்லையில் கிர்கிஸ்தான்-தஜிகிஸ்தான் மோதல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

சோவியத் யூனியனில் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகள் ஒன்றாக இருந்தன. ஒருங்கிணைந்த சோவியத் யூனியன் பிளவுப்பட்ட பின்னர் இரு நாடுகளும் பரிந்தன.

மத்திய ஆசியாவில் அமைந்துள்ள இருநாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை நிலவி வருகிறது. மேலும் எல்லைப் பிரச்னை தீர்க்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், கிர்கிஸ்தானின் பேட்கன் பகுதியில் மீண்டும் இன்று மோதல் வெடித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரு நாடுகளின் வீரர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்த மோதலில் 24 பேர் உயிரிழந்ததாக கிர்கிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 160-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த மோதலில் தஜிகிஸ்தானின் நிலைமை என்ன என்பது குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

இருநாட்டு எல்லையில் பதற்றம் நிலவி வருவதால் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லத் தொடங்கி உள்ளனர். இந்த மோதல் போக்கு இரு நாட்டுப் போராக ஆகிவிடாமல் இருக்க வேண்டும் என்று உலக நாடுகள் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளன. 

இந்த இருநாடுகளின் எல்லை அருகே இருக்கும் மற்றொரு நாடு உஸ்பெகிஸ்தான்.

இங்கு தான் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. நேற்று நடந்த உச்சி மாநாட்டில் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் அதிபர்கள் சதிர் ஜாபரோவ் மற்றும் எமோமாலி ரக்மோன் ஆகியோர் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள மோதலை நிறுத்துவது குறித்து விவாதித்தனர். இதில் “எங்கள் முன்னோர்களிடம் இருந்து பெற்ற நிலத்தில் ஒரு மீட்டர் கூட நாங்கள் யாருக்கும் அளிக்க மாட்டோம்”என தஜிகிஸ்தான் அதிபர் ஜாபரோவ் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-உமா பார்கவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

14 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”; 6 மாவட்டங்களுக்கு “மஞ்சள் அலட்”

Halley Karthik

“வீட்டுக்கு போகச் சொல்லாதீர்கள்; ஏனெனில் எனக்கு வீடு இல்லை”

Mohan Dass

பலத்த காயமடைந்த முதியவருக்கு உதவிய அமைச்சர்

Gayathri Venkatesan