புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட நிலையில் முதலமைச்சராக ரங்கசாமி ஐந்தாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், மீதமுள்ள மூன்று அமைச்சர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையின் பெயரில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகரன் (பாஜக) ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இவர்கள் மூன்று பேருக்கும் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை நடைபெற வாய்ப்பு உள்ளது..




