முக்கியச் செய்திகள் தமிழகம்

மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்

மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லா பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

76 வயதான இல.கணேசன் பாஜகவில் தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநில தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2016ஆம் மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு 2018 வரை பதவி வகித்தார். இல.கணேசன் தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகித்துவந்தார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் புதுச்சேரி ஆளுநர் பொறுப்பு இல.கணேசனுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்த சூழ்நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக இதற்கு முன்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகநாதன் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் நாம் தமிழர்!

கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது நாகரீகமற்ற செயல்: கே.எஸ்.அழகிரி

Gayathri Venkatesan

மருத்துவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர்!

Vandhana