முக்கியச் செய்திகள் குற்றம்

டிஎஸ்பி அலுவலகத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி

செங்கத்தில் தனது கணவர் மீது பொய் வழக்கு போடுவதாகக் கூறி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கர்ப்பிணி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அவரை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தனது கணவர் மோகன்ராஜ் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய செங்கம் காவல்துறையினர் முனைப்பு காட்டி வருவதாகவும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யுமாறு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவரது மனைவி சினேகா புகார் அளித்தார்.

இதனையடுத்து இன்று செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக சினேகா வரவழைக்கப்பட்டார். அப்போது, அவர் தன் கணவர் மீது பொய் வழக்குகளை போட்ட காவல்துறையினரை கண்டித்து அலுவலகத்திலேயே தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பிரபல தாதா சோட்டா ராஜன் உடல்நிலை விவகாரம்: மருத்துவமனை மறுப்பு

Halley karthi

ஆந்திராவில் விநோத முறையில் திருமணம்!

Vandhana

அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்

Gayathri Venkatesan