கேரளாவில் இரு கைகளும் இல்லாத இளைஞர் தனது கால்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தாவர் பிரணவ். பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த இவர், தனது கால்களால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார். அத்துடன் கால்களை பயன்படுத்தி ஓவியமும் வரைகிறார். பிரணவ் கடந்த 2019ம் ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தனது கால்களை பயன்படுத்தி எடுத்துக்கொண்ட செல்பியால் மிகவும் பிரபலமானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஆலத்தூர் பகுதியில் உள்ள சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு சென்று நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். கைகள் இல்லாததல் தனக்கு காலில் தடுப்பூசி போடும்படி அங்கிருந்த செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் மருத்துவர்களிடம் இதுபற்றி கேட்டதற்கு காலில் தடுப்பூசி செலுத்துவதால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்ததையடுத்து அவருக்கு காலில் முதல்தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவருடன் அவரது தந்தை பாலசுப்பிரமணியனும் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக செயல்படுகிறது என தெரிவித்தார்.