ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் திடீர் முடக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ’ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் யூடியூப் சேனல் திடீரென மூடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல இசை அமைப்பாளரும் நடிகரும் இயக்குநருமான ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்ற இசை…

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ’ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் யூடியூப் சேனல் திடீரென மூடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல இசை அமைப்பாளரும் நடிகரும் இயக்குநருமான ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்ற இசை ஆல்பத்தின் மூலம் பிரபலமடைந்தார். இதையடுத்து சினிமாவுக்கு இசை அமைக்கத் தொடங்கினார். பின்னர் நட்பே துணை, மீசையை முறுக்கு, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது ’சிவகுமாரின் சபதம்’ என்ற படத்தில் நடித்துள் ளார்.

இந்நிலையில் இவர் ’ஹிப் ஹாப் தமிழா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் தனிப்பட்ட பாடல்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 20 லட்சம் பார்வையாளர்களை கொண்ட இவருடைய யூடியூப் சேனல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இவருடைய யூடியூப் சேனலை சிலர் ஹேக் செய்துள்ளனர். அவருடைய யூடியூப் பக்கத்தில் இருந்த அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அதை மீட்கும் முயற்சியில், ஆதியின் டெக்னிக்கல் டீம் முயன்று வருகிறது. பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்களை, மர்ம நபர்கள் ஹேக் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில் குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டிருந்தது. இப்போது ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.