முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் பிரணாப் முகர்ஜி மகன்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று சேர்ந்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி. காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து வந்த அவர், விரைவில் அந்தக் கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாயின. அவர் மம்தா பானர்ஜியுடன் தொடர்ந்து பேசி வந்ததாகவும் கூறப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதை உண்மையாக்கும் வகையில் கொல்கத்தாவில் நடந்த விழாவில் அபிஜித் முகர்ஜி, இன்று அந்தக் கட்சியில் இணைந்தார்.

பின்னர் அவர் பேசும்போது, மேற்குவங்கத்தில் பா.ஜ.கவின் சமீபத்திய வகுப்புவாத அலையை மம்தா பானர்ஜி தடுத்த விதம் சிறப்பானது என்றும் எதிர்காலத்தில் மற்றக் கட்சிகளின் ஆதரவுடன் ஒட்டு மொத்த நாட்டிலும் அதை சரியாக செயல்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மாற்றுக் காட்சியினரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களும் அந்தக் கட்சியில் தொடர்ந்து இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விவசாயிகள் நலனை திமுக அரசு புறக்கணிக்கிறது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

EZHILARASAN D

டி ஷர்டாக மாறும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வருமானம் ஈட்டும் நிறுவனம்!

எல்.ரேணுகாதேவி

பிரிக்ஸ் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

G SaravanaKumar