தனுஷ் நடிக்கும் படத்தில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நடிகர் பிரகாஷ் ராஜ் குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் அவர் எப்போதும் பிசியாக இருக்கிறார்.
இவர் இப்போது தனுஷ் ஹீரோவாக நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் (#D44) 44 வது படமான இதை, மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்பட பலர் நடிக்கின்றனர். இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் பிரகாஷ் ராஜ், படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
https://twitter.com/prakashraaj/status/1425025005641887749
இந்நிலையில், அவருக்கு படப்பிடிப்பில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ட்விட்டரில் அவர், ‘கீழே விழுந்ததில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. ஐதராபாத் சென்று கொண்டிருக்கிறேன். எனது நண்பரும் மருத்துவருமான குருவா ரெட்டி அறுவை சிகிச்சை செய்யவிருக்கிறார். கவலைப்படத் தேவையில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.







