முதலமைச்சர் பழனிசாமியின் அரசு சிறப்பாக செயல்பட்டு பல்வேறு விருதுகளை குவித்து வருவதவாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மத்திய அரசால் வழங்கப்படும் நல் ஆளுமை திறன் பட்டியலில் தமிழக அரசு முதலிடம் பிடித்துள்ளதாகவும், தனியார் பத்திரிகையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒட்டு மொத்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து 3-ம் ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.







