நடிகை ஸ்ரேயா, தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை ஸ்ரேயா, தமிழில், எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மழை, ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ள ஸ்ரேயா, 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரீ கோஸ்சீவ் (Andrei Koscheev) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, இந்தியா மற்றும் ஸ்பெயினின் பார்சிலோனாவில் மாறி மாறி வசித்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் பார்சிலோனாவில் இருந்து கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்,
இந்நிலையில், தனது இஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இப்போது தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் ஆச்சரிய மடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகப் போகிறதாம். அது தொடர்பாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், ஊரடங்கு காலத்தில் ஸ்ரேயா கர்ப்பமாக இருந்த போட்டோவையும் ஒரு குழந்தையை ஸ்ரேயாவும் அவர் கணவரும் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்கள், இதை ஏன் இவ்வளவு நாளா சொல்லாம மறைச்சீங்க? என்று கேட்டுள்ளனர்.









