முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ’ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப் பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸ். ’பாகுபலி’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழு வதும் பிரபலமடைந்தார். இதனால், அவர் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில், ஐந்து மொழிகளில் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள பீரியட் படம், ’ராதே ஷ்யாம்’.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கிருஷ்ணம் ராஜூ, சச்சின் கடேகர், பிரியதர்ஷினி, முரளி சர்மா, பிரபல இந்தி நடிகை பாக்யஸ்ரீ, சத்யன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை, 1970 ஆம் ஆண்டு ஐரோப்பியாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இதன் ஷூட்டிங், இத்தாலி, ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நடந்தது. ஐதராபாத்திலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் ஏராளமான பொருட் செலவில் தயாரிக்கிறது.

ஜூலை 30 ஆம் தேதி ராதே ஷ்யாம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி, அதாவது பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாரி செல்வராஜின் ‘வாழை’ படப்பிடிப்பு தொடங்கியது

EZHILARASAN D

தமிழ் வழி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு? – அமைச்சர் பதில்

G SaravanaKumar

யானையை தீ வைத்து கொன்ற, நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி!

Niruban Chakkaaravarthi