கோயில் நிலங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது: அமைச்சர் மூர்த்தி

முறைகேடுகளை தடுக்க, கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார் மதுரை மாவட்டம் புது தாமரைப்பட்டி கிராமத்தில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையத் தை…

முறைகேடுகளை தடுக்க, கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்

மதுரை மாவட்டம் புது தாமரைப்பட்டி கிராமத்தில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையத் தை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்திரப்பதிவுத்துறையில் முறைகேடு நடந்ததாக புகாரளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவாளருக்கான மேடைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மூர்த்தி, கோயில் நிலங்களை சட்டவிரோத மாக பதிவு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்களை கணினியில் பதிவேற்றும் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மூன்று மாதத்தில் அதிமுக செய்ததை விட அதிகமாகவே நாங்கள் செய்திருக்கிறோம் என்று கூறிய அமைச்சர் மூர்த்தி, அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளில் எத்தனை தொகுதிகள், எத்தனை இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மனுக்கள் வாங்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.