600/600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தங்கப் பேனாவை பரிசளிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திண்டுக்கல் பாரதி புரத்தை சேர்ந்த தச்சுத் தொழிலாளி சரவணகுமார், பாலப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து மொத்தமாக 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு பலரும் வாழத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மாணவி நந்தினியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவி நந்தினி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் இன்று காலை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
ஒரு
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறதுஎப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே! pic.twitter.com/bkSbrmrlqt— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2023
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தனது ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வழங்கப்பட்டுள்ள தங்கப் பேனாவை மாணவி நந்தினிக்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
”ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை சொல்கிறது
எப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்
திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்
உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!”
என கவிஞர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.