குன்னுாரில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியிலுள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றம் துவங்கியது. இந்நிலையில் மே 8 ம் நாள் முளைப்பாரி கங்கையை அடைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக கலந்து கொண்டனர்.
இக்கோயில் பூஜையில் கலந்துகொண்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை . இந்நிகழ்ச்சியில் ஆண்களும் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின் பெண்கள் எடுத்து வந்த முளைப்பாரியை கிராம எல்லை பகுதியில் வைத்து கும்மி அடித்து பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டு சிறப்பித்தனர்.







