முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்வெட்டு மாயத்தோற்றம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

திமுக ஆட்சி அமைந்தவுடன் தான் மின் வெட்டு ஏற்படுவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல் 6 ம்  தேதி முதல் விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொழில்துறை, மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி, நிர்வாகத்தில் உள்ள தவறுகளால் மின் வெட்டு ஏற்படுவதாகவும், முன்பு அணிலால் மின் வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்த அமைச்சர் இப்போது நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படுவதாக கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சி அமைந்தவுடன் மின் வெட்டு ஏற்படுகிறது என்ற மாய தோற்றத்தை உருவாக்குவதாகவும், 2 நாட்களில் மின் வெட்டு சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சியில் 2018-ல் 59 மணி நேரம் 58 நிமிடங்களும், 2019-ல் 39 மணி நேரம் 20 நிமிடங்களும், 2020ல் 32மணி நேரம் 80 நிமிடங்களும், 2021ல் தொடர் மின் வெட்டு இருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், 2018ல் நுகர்வோர் பற்றாக்குறை 76.91 மில்லியன் யூனிட் இருந்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின் வெட்டு, மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், கடந்த காலங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

இரவில் கனவு கண்டாலும், பகல் கனவு கண்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் மின்வெட்டு இருக்காது என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த வழிகாட்டு நெறிமுறை முதலமைச்சர் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜூன் 14இல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்ட ஆலோசனை

Web Editor

அடிப்படை வசதிகள் கோரி கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!

Web Editor

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை : பள்ளிக் கல்வித்துறை

Halley Karthik