மாநில அரசு மத்திய அரசுக்கும், மத்திய அரசு மாநில அரசுக்கும் வழங்கவேண்டிய நிலுவை தொகை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனவாசன் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று தொழில் துறை, மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், கோயமுத்தூர் நகரை சுற்றி குளங்கள் அதிகமாக இருப்பதாவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளங்களை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டாலும், 23% பயனாளர்கள் ,இத்திட்டத்தை பெற தகுதியுடையவர்களாக இருப்பதால் அவர்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுக்க வேண்டும் என்று கோரிகை வைத்தார்.
தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், பேரவையில் பல முறை மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை வாங்கித்தர வேண்டும் என்கிறார்கள். அதனால், மாநில அரசுக்கு எந்தெந்த துறையில் எவ்வளவு நிலுவை தொகை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை தரவேண்டும் என்றார்.
அதோடு மாநில அரசு மத்திய அரசுக்கும், மத்திய அரசு மாநில அரசுக்கும் வழங்க வேண்டிய நிலுவை தொகை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனவாசன் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு அரசு மதுவிலக்கு கொண்டு வரவேண்டு என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.