தமிழ்நாட்டில் 3 மின் உற்பத்தி திட்டங்களில் ரூ.24,500 கோடி முதலீடு! – அதானி கிரீன் நிறுவனம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 3 நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி திட்டத்தில் ரூ. 24,500 கோடியை முதலீடு செய்வதாக அதானி கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.  “உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024”  கடந்த ஜனவரி 7…

தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 3 நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி திட்டத்தில் ரூ. 24,500 கோடியை முதலீடு செய்வதாக அதானி கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. 

“உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024”  கடந்த ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதனைத் தொடர்ந்து,  முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,  நிறுவனங்களின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து,  புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான்,  டிவிஎஸ் குழுமம்,  மிட்சுபிஷி,  அதானி கிரீன் நிறுவனம்,  ஏ.பி. மோலார் மெர்ஸ்க்,  ஹுண்டாய்,  JSW,  அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன.

இந்நிலையில்,  அதானி கிரீன் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி திட்டங்களில் ரூ. 24,500 கோடி முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திட்டது.

இதையும் படியுங்கள் : “தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்” – இபிஎஸ் பேட்டி!

வேலூர் மாவட்டத்தில் நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதியை அதானி கீரின் எனெர்ஜி நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் கோரியது.  இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது முதலீடாக மாறிஉள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.