லாட்டரி டிக்கெட் மூலம் 1 மில்லியன் டாலரை பரிசாக பெற்ற இந்திய பெண்..!

பஞ்சாபைச் சேர்ந்த பாயல் என்ற 42 வயதான பெண் துபாய் டூட்டி ஃப்ரீ (டிடிஎஃப்) என்ற லாட்டரி டிக்கெட்டின் மூலம் 1 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.8.33 கோடி) பரிசாக பெற்றுள்ளார்.   இது…

பஞ்சாபைச் சேர்ந்த பாயல் என்ற 42 வயதான பெண் துபாய் டூட்டி ஃப்ரீ (டிடிஎஃப்) என்ற லாட்டரி டிக்கெட்டின் மூலம் 1 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.8.33 கோடி) பரிசாக பெற்றுள்ளார்.  

இது தொடர்பாக அவர் கூறுகையில் “நான் இந்த டிக்கெட்டை வாங்குவதற்குப் பயன்படுத்திய பணம் எனது கணவர் எனக்கு கொடுத்தது.  ஏப்ரல் 20 அன்று எங்களின் 16 வது திருமண நாளையொட்டி அவர் எனக்கு இந்த பணத்தை பரிசளித்தார்.  அந்த பணத்தை வைத்து ஆன்லைனில் டிடிஎஃப் டிக்கெட்டை வாங்க நினைத்தேன்.

3 என்ற எண் அதிகமாக கொண்ட டிக்கெட்டை நான் தேர்ந்தெடுத்தேன்.  கடந்த 12  வருடங்களாக டிடிஎஃப் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறேன்.  நான் விமான நிலையத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை டிடிஎஃப் வாங்குவேன்.  ஆனால் இந்த முறை, முதன்முறையாக,  ஆன்லைனில் டிக்கெட் வாங்கியபோது பரிசு பெற்றுள்ளோன்.

நான் என் கணவருக்கு போன் செய்து இது பற்றி கூறினேன்.  நான் அவரிடம் பேசும்போது மகிழ்ச்சியில் என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.  என் குழந்தைகளுக்கு இன்னும் இதுபற்றி தெரியாது.  அவர்களைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது அவர்களிடம் கூறுவோம்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.