முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பாண்டங்கள்: கோரிக்கை

பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பாண்டங்களையும் இணைத்து வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த முல்லைவாடி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் விழாவையொட்டி தற்போது மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. செம்மண் தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு செம்மண் விலை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால், மண்பாண்ட உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் உற்பத்தியாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மின்சக்கரம் உள்ளிட்டவை வழங்க வேண்டும் எனவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பாண்டங்களையும் இணைத்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்த் காலமானார்!

Gayathri Venkatesan

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்குபாலம்

Gayathri Venkatesan

சபாநாயகர் ஆகிறார் அப்பாவு!

Halley Karthik