கட்டுரைகள்

பூச்சிகளின் மீதேறி பயணிக்கும் மனித இனம்


காயத்ரி வேல்முருகன்

கட்டுரையாளர்

இந்த உலகம் தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகளில் உயிர்கள் கடந்த 1 பில்லியன் ஆண்டுகளாகதான் தோன்றி வாழ்ந்து வருகின்றன. அப்போது தொடங்கி தற்போது வரை ஏறத்தாழ இந்த புவியானது சுமார் 4 முறை பேரழிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இங்கு வாழ்ந்து வந்த உயிரினங்களில் ஏறத்தாழ 90%க்கு அதிகமானவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. மீதமிருக்கக்கூடிய உயிர்களில் நாமும் தற்போது வாழ்ந்து வருகறோம்.

ஆனால் தொடர்ந்து இந்த புவியை முழுமையாக கைப்பற்ற முயன்று வருகிறோம். ஆனால் இதற்கு பல சவால்களை மனித இனம் எதிர்கொண்டு வருகிறது. ஒருவேலை மனித இனம் இந்த புவியிலிருந்து முற்றிலும் அழிந்து போனால் இதை வேறு யார் ஆள்வார்கள்? இந்த கேள்வி பல ஆண்டுகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அது நீங்கள் முற்றிலும் வெறுக்கும் ஒரு உயிர்தான். ஆம் அது பூச்சிகள்தான்.

உணவு சங்கிலியில் அநேகமாக கடைசி இரண்டாவது இடத்தில் உள்ள இந்த பூச்சிகள் எப்படி இந்த உலகை ஆளும்? இதைப்பற்றிதான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

உயிரினங்கள் பற்றி அறியாத தகவல்கள்…!

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இறப்பு என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் சில வகையான உயிரினங்கள் அதிசயமான, ஆச்சரியமான தகவமைப்புகளை பெற்றிருக்கின்றன.

இதில் சிறப்புத் தன்மை கொண்டிருப்பது கரப்பான் பூச்சி. உலகில் துருவப் பகுதிகள் தவிர்த்து ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வீட்டுத்தங்குயிரியாக காணப்படும் இது, ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,490 வகை இனங்களாக வாழ்ந்து வருகிறது. இவை எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும். அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என்று நம்பப்படுகிறது.

வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையிலும் வளரும் தன்மை கொண்ட இந்த உயிரி, அதன் தலையை வெட்டி எறிந்தாலும் தலையின்றி 9 நாட்கள் வரை உயிர் வாழும் தகவமைப்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் 9வது நாளின் இறுதியில் பசி காரணமாக உணவு உண்ண முடியாமல் இறந்து போகும் என்கிறார்கள் விலங்கியல் ஆய்வாளர்கள்.

சமீபத்தில் அதிவேகமாக நகரும் ஆறு கால் கொண்ட ரோபோவை வடிவமைத்த கலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் ஃபுல் அந்த ரோபோவின் வடிவமைப்புக்கு உந்துதலாக இருந்தது கரப்பான் என்கிறார். “ஒருமுறை கரப்பான்கள் நகர்வதை உன்னிப்பாகக் கவனித்தேன் நீளமான உருண்டை வடிவம் கொண்ட உடலை ஆறு சுழலும் கால்கள் தாங்கி நிற்கின்றன. கடினமான இடங்களில்கூட அவை நகர்கின்றன. அதுதான் என்னைத் தூண்டியது” என்கிறார்.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் மினி கணினியை அறுவை சிகிச்சை மூலம் கரப்பான்களுடன் இணைத்து விடுகிறார்கள். அந்தக் கணினிக்குக் கொடுக்கப்படும் தகவல்படி கரப்பான் நகரும், இதனால் சேதமடைந்த கட்டடங்கள் மனிதர்கள் செல்ல முடியாத குழாய்கள் போன்றவற்றுக்குள் இந்தக் கரப்பான்களை அனுப்பித் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்த உயிரிகள் குறித்த பல்வேறு நம்பிக்கைகள் உலகம் முழுவதும் பரவலாக உலவுகிறது. ஆஸ்திரேலியா நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் ‘ஆஸ்திரேலிய தினத்தில்’ கரப்பான்பூச்சி பந்தயம் நடத்தப்படுகிறது. கரப்பான் பூச்சிகள் மனிதர்களைத் தொட்டுவிட்டால், உடனே தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் என்று மெக்சிகோ வரை இந்த நம்பிக்கை நீள்கிறது. உலகில் இன்னும் விநோதமான நம்பிக்கைகள் இதன் மீது உள்ளன.

மறுபுறத்தில் அறிவியல் நடத்திய ஆய்வில், பூச்சிகளால் குறிப்பிடத்தக்க அளவிலான உணர்வுகளை அனுபவிக்க முடியும் கூறப்படுகிறது. மனிதர்கள் மற்றும் இதர 5 அறிவு கொண்ட உயிரினங்களை போலவே பூச்சிகளும், தங்களுக்கான உணவுர்களை கொண்டிருக்கின்றன. பூச்சிகள் இன்ப அதிர்ச்சிகளில் மகிழ்ச்சியுடன் சப்தம் எழுப்பலாம், அல்லது தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு சூழலில் மனச்சோர்விலும் மூழ்கலாம்.

மேலும், மனிதர்களைப்போலவே நம்பிக்கையுடையவர்களாகவோ, பயந்தவர்களாகவோ இருக்கலாம். அவைகளுக்கு ஏற்படும் வலி போன்ற உணவுர்களுக்கும் அவை பதிலளிப்பது போன்று நடந்துக்கொள்ளலாம். ஒரு ஏக்கம் நிறைந்த கொசு, இறந்த எறும்பு அல்லது கரப்பான் பூச்சியை இதுவரை யாரும் சரியாக காணவில்லை என்றாலும், அவைகளின் உணர்வுகள் சிக்கலானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூச்சிகளின் உருவ அளவில், அதன் மூளையானது மிகவும் சிறியதுதான். ஆனால் இவைகள் இத்தனை திறன் கொண்டதாய் எப்படி இருக்கிறது என்பது ஆய்வாளர்களுக்கு பெரும் வியப்பாக தற்போது வரை நீடிக்கிறது. செல்லப்பிராணிகளைப் பழக்குவது போல கரப்பான்பூச்சிகளையும் பழக்க முடியும் என்கிறது ஆய்வு ஒன்று. இவ்வளவு வியத்தகு உயிரிகள் மனித இனத்திற்கு வர்த்தகத்திலும் பெரிதும் கைக்கொடுக்கின்றன.

உலக அளவில் கரப்பான் பூச்சி வர்த்தக பயன்பான்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. சீன விவசாயிகள் கரப்பான் வளர்ப்பில் அதிக முதலீடு செய்துள்ளனர். பண்ணைகளில் அறுவடை செய்யப்படும் கரப்பான் பூச்சிகளைப் பெரும் தொகை கொடுத்து வாங்குகின்றனர். அந்நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பிலும், பாரம்பரிய சீன மருத்துவத்திலும் கரப்பான்கள் பயன்படுத்தப்படுவதால், கரப்பான் பூச்சிகளுக்கான தேவை சீனாவில் அதிகரித்துள்ளது. ஆசிய நாடுகளான சீனா, தாய்லாந்து மற்றும் பர்மாவின் பாரம்பர்ய உணவுப் பட்டியலில் கரப்பான் இருப்பதால் அவர்கள் பெரிதாக முகம் சுழிப்பதில்லை.

ஆக இவையெல்லாம் சொல்வது ஒன்றுதான். இவ்வுலகில் வாழும் பல உயிர்களில் மனித இனமும் ஒன்றுதானே தவிர, மனிதன் மட்டுமே இவ்வுலகம் அல்ல என்பதுதான் அது. ஒரு மாலை வேளையில் உங்களை சுற்றி இருக்கும் செடி, மரங்களை சற்று கவனியுங்கள். உங்களுக்கும் பூச்சிகளின் மொழி புரியலாம்.

Advertisement:
SHARE

Related posts

பாடல் வரிகளால் பூவென மணக்கும் கவிஞர் பூவை செங்குட்டுவன்

Saravana Kumar

உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்

Halley Karthik

சவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை

Ezhilarasan