‘உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு’ – தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர்

ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசித்து வருவதாக…

ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்ததாகவும், அதனால் வரும் 20-ஆம் தேதி மண்டல அளவில் நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து 25 அம்ச கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜன், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாகவும், சாத்திய கூறுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும் அரசு அலுவலர்களுக்கு ஜனவரி-1, 2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி வழங்குவது குறித்து முறையிட்டதாகவும், ஒரு வாரகாலத்திற்குள் அகவிலைப்படி குறித்த அறிவிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளதாகவும் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘’முதலமைச்சர் மெத்தனமாக இருப்பதால் தான் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கிறது’ – பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி’

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்தாக தெரிவித்த அவர், அக்டோபர் மாதம் தேதி வழங்குவதாக முதலமைச்சர் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததால் வரும் 20-ஆம் தேதி மண்டல அளவிலான நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கபடுவதகாவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.