புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு; வன்னி அரசுவிற்கு சமூக நீதித்துறை…!

புதிதாக பொறுப்பேற்றள்ள அமைச்சர் வன்னி அரசுவிற்கு சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு அமைச்சரவை விரிவாக்கத்தின் படி இன்று விசிக (திண்டிவனம்) எம்.எல்.ஏ வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் (பாபநாசம்) எம்.எல்.ஏ எம். ஷாஜஹான் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் படி அமைச்சர் வன்னி அரசுக்கு சமூக நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறை முன்னதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்று அழைப்பட்டு வந்த நிலையில் தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதே போல மற்றொரு அமைச்சரான ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கபட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.