தமிழ் நாடு அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தவெக சார்பாக 21 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் சார்பில் 2 எம்.எல்.ஏக்கள் உள்பட மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதற்கிடையில் தவெக அமைச்சரவையில் இடம் பெற விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் சம்மதம் தெரிவித்தன.
இதனை தொடர்ந்து இன்று விசிக திண்டிவனம் எம்.எல்.ஏ வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் பாபநாசம் எம்.எல்.ஏ எம். ஷாஜஹான் ஆகியோர் இன்று பதவியேற்றனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் வன்னி அரசுவிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போல அமைச்சர் ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கபடலாம் என்று தெரிகிறது.







