GOLD RATE : சற்றே குறைந்த தங்கம் விலை…!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன் படி, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ. 60-ம் சவரனுக்கு ரூ. 480-உம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,810-க்கும் ஒரு சரவன் ரூ, 1,18,480-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,780க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன் படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு
ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.295க்கும், கிலோவுக்கு ரூ.5000
உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.