முக்கியச் செய்திகள் இந்தியா

மக்கள் தொகை பெருக்கம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது; இந்திய தேசிய அறிவியல் கழக விஞ்ஞானி ராகவேந்திர ராவ்

மக்கள் தொகை பெருக்கத்தால் கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. அதே போல
சுற்றுசூழல் பாதிப்பு, பேரிடர்களும் அதிகரித்து வருகிறது என இந்திய தேசிய அறிவியல் கழக கவுரவ விஞ்ஞானி ராகவேந்திர ராவ் பேசினார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் லைப் சயின்ஸ், பயோ சயின்ஸ், சென்னை
நேஷனல் அகாடெமி ஆப் பயாலாஜிகல் சயின்ஸ் ஆகியவை இணைந்து 13 வது தேசிய மாநாட்டை நடத்துகிறது. உயிரி அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மையில் நிலையான வளர்ச்சிக்கான தற்போதைய பார்வை என்ற தலைப்பில் நடைபெறுகிறது. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் பாலகுருநாதன் ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமச்சீரான சூழலை பேனுதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் திறமையாக பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இந்த மாநாடு எடுத்துக்காட்டுகிறது. வேளாண்மை, சுகாதார மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் எழும் சவால்களை எதிர் கொள்வதில், வளர்ந்து வரும் நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புதுமையான யோசனைகள் மிகுந்த அக்கறை கொண்டவையாக உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆராய்ச்சி கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கும், உயிரி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் வேளாண் அறிவியல் ஆகிய துறைகளில் அறிவுசார் அறிவை வளர்ப்பதற்கும் உண்மையான நிலையான வளர்ச்சியை நோக்கி, ஒரு பொது மேடையில் ஒன்று சேர்வதற்கு இந்த மாநாடு பயன்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பெங்களூர் இந்திய தேசிய அறிவியல் கழக கவுரவ விஞ்ஞானி ராகவேந்திர ராவ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, உலகம் வளர்ந்து வரும் நிலையில், மக்கள் தொகைக்கு ஏற்ப
கட்டிடங்கள் கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், சுற்றுசூழல்
பாதிப்பும் அதிகரித்து வருகிறது. மேலும், இயற்கை பேரிடர், நீர் மாசு, காற்று
மாசு ஆகியவை அதிகரிக்க துவங்கியுள்ளது என்றார்.

மேலும், டெல்லியில் காற்று மாசு அவ்வப்போது ஏற்படுகிறது. மரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் குறைவதால், பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பேசினார்.

இந்த கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள், பல்துறை வல்லுனர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட750 பேர் பங்கேற்றுள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 என பதிவு

பணிகளை சரியாக செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: வேளாண் அமைச்சர் எச்சரிக்கை

Web Editor

சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Web Editor