முக்கியச் செய்திகள் இந்தியா

சேவையில் குறைபாடு, அடிக்கடி கட்டண உயர்வு; நெட்வொர்க்கை மாற்றிய 20 லட்சம் வாடிக்கையாளர்கள்!

சேவையில் குறைபாடு இருந்தாலும் ,அடிக்கடி கட்டணங்களை உயர்த்திக்கொண்டே சென்ற, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் இணைப்பை விட்டு இருபது லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர் அது குறித்த செய்தியை பார்க்கலாம்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ,பெரும்பாலான மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாகி விட்டன. மொபைல் போனும், இண்டர் நெட் இணைப்பும்.பி.எஸ்.என்.எல் மற்றும் வி.எஸ்.என்.எல் ஆகிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கின பல தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள். கடைசியில் ஜியோ ,ஏர்டெல்,வோடபோன் ஐடியா என மூன்று நிறுவனங்கள் மட்டும் களத்தில் உள்ளன, பொதுவாக எல்லா துறைகளிலும், தொலை தொடர்பு சேவையின் பயன்பாட்டால் பலவகைகளில் செலவு குறைந்து விட்டது. ஆனால் தொலை தொடர்பு நிறுவனங்களில் மட்டும் செலவு அதிகமாகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.மேலும் கேள்வி கேட்க வேண்டிய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ,டிராயிடம், செயற்கையான நஷ்ட கணக்கை காட்டி, எப்படியாவது கட்டண உயர்வுக்கு அனுமதி பெற்று விடுகின்றன என சொல்லி வருகின்றன நுகர்வோர் அமைப்புகள். இந்த கட்டண உயர்வை சுகமான சுமையாக தாங்கி கொண்டு வந்தனர் வாடிக்கையாளர்கள் . கொரோனாவுக்கு பின்பும் தொலை தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வு கொள்ளை தொடர்கதையாகி விட்டது. சிந்தித்து செயல்பட ஆரம்பித்த மக்கள் , தங்களிடம் உள்ள மொபைல் போன் இணைப்புகளின் எண்ணிக்கையை குறைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிறுவனங்களும் தேவையற்ற இணைப்புகளின் எண்ணிக்கையை குறைத்தன. இறுதியில் கடந்த ஜூலை மாதம் மட்டும் சுமார் 40 லட்சம் ஆக்டிவ் யூசர்கள், அதாவது நிறுவனத்தின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுவந்த பயனாளர்களை ரிலையன்ஸ்  ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் இழந்துள்ளன.இதனால் மேற்கண்ட நிறுவனங்களும் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தலா 10 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.ஆகஸ்ட் மாத நிலவரப்படி மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது ரிலையன்ஸ் ஜியோவுக்கு 38.2 கோடியாகவும், ஏர்டெல்லுக்கு 35.6 கோடியாக உள்ளது.
விஐ என அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா ஜூலை மாதம் 20 லட்சம்  வாடிக்கையாளர்களை இழந்துள்ளதால்,வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 21.7 கோடியாக உள்ளது. ஏற்கனவே நிதி சிக்கல் ஒரு புறம், மறுபுறம் போட்டி நிறுவனங்கள் என,இருக்கும் நிலையில் விஐ நிறுவனத்துக்கு 20 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறியது பேரிழப்பே.

இப்போது இந்திய தொலைதொடர்பு சந்தையில் இன்னொரு கேள்வி எழுந்துள்ளது. 4 ஜி சேவைக்கே இந்நிலை என்றால், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்க உள்ள 5 ஜி சேவைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும். இப்போதைய 4 ஜி யிலே தொடர்வார்களா,5 ஜி சேவைக்கு எவ்வளவு பேர் மாறுவார்கள் என தனியார் நிறுவனங்களை சிந்திக்க வைத்துள்ளனர் இந்திய மக்கள்.5 ஜி வந்தால் ,4 ஜியின் விலை குறையுமா. 4ஜி சேவையை பெறும் மொபைல் போனிலே 5 ஜி சேவையை பெற முடியுமா என பல புதிய கேள்விகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் கிடைக்க, இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம்.அதுவரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் கால் நூற்றாண்டுகளாக அரசின் ஆதரவின்றி அமைதியாக செயல்படும் பொதுத்துறை நிறுவனம் பி.எஸ்.என்.எல் புதிதாக ஒரு லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அத்துடன் வயர்டு பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 40 லட்சமாக உயர்ந்து தன் இருப்பை காட்டி கொள்கிறது நிறுவனங்கள். கட்டணத்தை நிர்ணயித்தாலும், வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் சேவையை தொடர்வதா இல்லை.வெளியேறுவதா என தீர்மானிக்க தொடங்கி விட்டதால், இனி தொலை தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள, மீண்டும் சலுகைகளை வாரி வழங்கினாலும் வியப்பேதும் இல்லை என்கின்றனர் தொலை தொடர்பு நிபுணர்கள்
இந்திய நாட்டு மக்கள் மிகவும் அமைதியானவர்கள். சகிப்புத்தன்மைக்கும் பெயர் போனவர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது . எல்லை மீறினால் அவ்வளவு தான். அது பிரிட்டிஷ் ஆட்சியாகட்டும், விடுதலையை வாங்கி தந்த காங்கிரஸ் ஆகட்டும், மாற்று என வந்த மற்றவர்களாகட்டும். மவுனப்புரட்சியின் மூலம் அதிரடியாக வெளியேற்றி விடுவார்கள்.

ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்”: டிடிவி தினகரன்

Halley Karthik

மது போதையில் தகராறு – அதிமுக உறுப்பினருக்கு கத்திக்குத்து!

Web Editor

சென்னை புத்தகக் காட்சியில், முகக்கவசத்தோடு கையுறையை கட்டாயமாக்குக!

Arivazhagan Chinnasamy