கோதுமை பொருட்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து கோதுமை பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக சர்வதேச அளவில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க…

இந்தியாவில் இருந்து கோதுமை பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக சர்வதேச அளவில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு கடந்த மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

எனினும், கோதுமையில் இருந்து தயாராகும் கோதுமை மாவு, மைதா, ரவா உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இந்திய இயக்குநரகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, கோதுமை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அதற்கான அனுமதியை மத்திய அமைச்சர்கள் குழுவிடம் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வரும் 12ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் கோதுமைக்கும் கோதுமைப் பொருட்களுக்கும் இருக்கும் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவில் இருந்து தரமற்ற கோதுமைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் சில நிறுவனங்கள் முயன்று வருவதாலும், இதற்கெனவே புதிதாக நிறுவனங்கள் உருவெடுத்திருப்பதாலும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இந்திய இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், கோதுமைப் பொருட்களை வழக்கம் போல் தடையின்றி ஏற்றுமதி செய்யலாம் என்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இந்திய இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.