முக்கியச் செய்திகள் சினிமா

‘தொடர்ந்து கிராமத்துப் படங்கள் பண்ண ஆசையாக உள்ளது’ – நடிகர் கார்த்தி

தொடர்ந்து கிராமத்துப் படங்கள் பண்ண ஆசையாக உள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதாகவும் எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரிப்பில் அவரின் தம்பி கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாஸ், சூரி, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாகவும் இப்படம் மண்சார்ந்து உருவாகியுள்ள திரைப்படம் எனவும் விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரைக்கு வரும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி, பருத்தி வீரன் படத்தில் எனக்குக் கிடைத்த அன்பு எவ்வளவு பேருக்குக் கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை எனவும் கிராமத்துப் படங்கள் எவ்வளவு முக்கியம் என அனைவரும் கூறினார்கள் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இங்கு அப்பா, அம்மா என எவ்வளவு உறவுகள் உள்ளது அவர்களுடன் வாழ்வது ஒரு தனி சுகம். அதை இங்கு கதை எடுத்தால் தான் சொல்ல முடியும் என்றும் தொடர்ந்து கிராமத்துப் படங்கள் பண்ண எனக்கு ஆசை இருப்பதாகவும், இந்த கதையில் அப்பா தான் முதல் வில்லன் என்றும் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘‘பிரியாணி படத்தில் கார்த்தியையும், அஞ்சான் படத்தில் சூர்யாவையும் பாட வைத்தேன்’ – இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா’

மேலும், முதல் மரியாதை படத்தை முந்த ஒரு படம் பண்ண வேண்டும் என முத்தையாவிடம் கேட்டுக் கொண்டதாகவும், சினிமாவிற்க்கு பெண்களை அனுப்புவது பெரிய விஷயம். எங்க அப்பா எல்லாம் நடிக்கக் கூடாது என்றார் எனக்கூறிய அவர், ஊரோரம் புளியமரம் பாட்டு வெளியான பிறகு நைட் ஒரு மணிக்கு எனக்கு போன் வரும், முதலில் நைட் ஆரம்பித்தது பிறகு பகலிலும் போன் வரத் தொடங்கியது. அப்படி ஒரு வருடம் பாடல் ஓடும் போது எனக்குக் கால் வரும் எனத் தெரிவித்தார்.

கிராமத்துப் படம் பண்ணும் போது யுவனை விடக் கூடாது எனப் பிடித்து விட்டோம் எனவும் விமானத்தில் வரும் போது அண்ணாவிடம் ஏன் இந்த படத்தைத் தயாரித்தீர்கள் என்று கேட்டேன் உன்மேல் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டார் எனத் தெரிவித்த அவர், படம் நன்றாக வரவேண்டும் என அவ்வளவு பெரிய பயமாக இருந்தது எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது

Jeba Arul Robinson

பொருளாதார நிலை பற்றி மன்மோகன் சிங் பேசுவதா?: நிர்மலா சீதாராமன்

Halley Karthik

ரூ.1லட்சம் வரை விற்பனை செய்யப்படும் “ஹாப் ஷூட்ஸ்”

Halley Karthik