ரூ.250 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன் 2 வசூல்!

ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலை நெருங்கி வருகிறது.  வார நாட்களில் கூட திரையரங்குகளுக்கு கூட்டத்தை வரவழைத்துக் கொண்டிருக்கிற இயக்குநர்…

ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலை நெருங்கி வருகிறது. 

வார நாட்களில் கூட திரையரங்குகளுக்கு கூட்டத்தை வரவழைத்துக் கொண்டிருக்கிற இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் காவிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட தொடரின் இரண்டாம் பாகமாகும். இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் சோபிதா துலிபாலா உள்ளிட்ட பிரபல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இப்படம் அகில இந்திய அளவில் சுமார் 122.25 கோடி ரூபாய்  வசூலைப் பெற்றுள்ளது. மேலும் உலகம் முழுவதும் ரூ.250 கோடியை வசூலையும் நெருங்கி வருகிறது. இப்படம் அமெரிக்க வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படத்தின் உலகளாவிய வசூல் ஏற்கனவே ரூ 200 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது உலகளவில் ரூ 500 கோடி வசூலைப் பதிவு செய்தது. ஐந்தாவது நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ.27.5 கோடி வசூலித்ததால் இந்த பலவிதமான சாதனைகள் சாத்தியமானது.

பிரபல முன்னணி நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தையும், இயக்குநர் ரத்னத்தையும் பாராட்டி “தமிழ் சினிமா பொற்காலத்தை நோக்கி நகர்கிறது” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.