ஆழ்துளை கிணற்றின் மீது கழிவுநீர் கால்வாய் – பொதுமக்கள் அதிர்ச்சி!

பாப்பானுார் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றின் மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கீழ்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பானுார் கிராமத்தில் கடந்த ஒரு வராத்திற்கு முன்பு…

பாப்பானுார் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றின் மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கீழ்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பானுார் கிராமத்தில் கடந்த ஒரு வராத்திற்கு முன்பு புதிய கழிவு நீர் கால்வாய் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 14-வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் கால்வாய் கட்டப்பட்டது. இது அக்கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த ஆழ்துளை கிணறு மீது அமைக்கப்பட்டது என்பது கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கால்வாய் அமைக்கப்பட்ட ஒப்பந்ததார் மீது நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணற்றை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.