ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் – குலுங்கி குலுங்கி சிரித்த #OPS

ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குலுங்கி குலுங்கி சிரித்தார். பெரியகுளம் செல்வதற்காக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்…

Ponnayan's specific issue as EPS Rajaji's counterpart - shakes and laughs #OPS

ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குலுங்கி குலுங்கி சிரித்தார்.

பெரியகுளம் செல்வதற்காக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது..  
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெண் இனத்திற்கே விடுக்கப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவர்களும் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு மாநில அரசு உரிய முயற்சி எடுக்க வேண்டும்.

இபிஎஸ் தலைமையிலான அவசர செயற்குழு எதற்காக கூட்டப்பட்டது அதன் நோக்கம் என்ன என்பதை அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே எங்களுக்கும் அவர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில் எந்த வித கருத்துகளையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை.

ஒருபுறம் திமுகவினரை கடுமையாக விமர்சித்து விட்டு மறுபுறம் ஆளுநரின் தேநீர் விருந்தில் அவர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிரித்து பேசியது அவர்களின் இரட்டை நிலைப்பாடையே காட்டுகிறது. ஜெயக்குமார் நடத்துகின்ற நாடகத்திற்கு நான் விளக்கம் கொடுக்க தேவையில்லை.” என ஓபிஎஸ் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ” இபிஎஸ் ராஜாஜிக்கு நிகரானவர் என பொன்னையன் கூறியுள்ளாறே.. அதுபற்றி உங்கள் கருத்து என்ன? “ என கேள்வி எழுப்பினர். இதற்கு ஓபிஎஸ்  குலுங்கி குலுங்கி சிரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.