10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல்: பூந்தமல்லி வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி!

பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 10 ஆண்டுகளுக்குப்  பிறகு தேர்தல் நடைபெற்றதால் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையை அடுத்த பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு கடந்த…

பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 10 ஆண்டுகளுக்குப்  பிறகு தேர்தல் நடைபெற்றதால் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது, இந்நிலையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான சங்க தேர்தலை நடத்த தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் கமிட்டி முடிவு செய்தது, அதன்படி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேர்தலில் 200க்கும் மேற்ப்பட்ட வழக்கறிஞர்கள் வாக்களித்தனர்.

இதில் சங்க தலைவராக ஏகாம்பரம், செயலாளராக கோபு, பொருளாராக ஆனந்த் பாபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை தவிர செயற்குழு, பொதுகுழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னா் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

—-ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.