பொங்கல் திருநாள்: சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்கள்

பொங்கல் பண்டிகையொட்டி தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதை சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வரும் பொங்கல்…

பொங்கல் பண்டிகையொட்டி தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதை சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோருக்கான ரயில் டிக்கெட் முன் பதிவு இன்று தொடங்கியது. ஆனால் இந்த முன் பதிவு டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே முடிந்தன. இதனால் பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் 2023 -ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலையொட்டித் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்படுகிறது. இதனையொட்டி ரயில் பயணத்துக்காக, 120 நாள்களுக்கு முன்னதாகவே ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்ட்டா்கள், ஐஆா்சிடிசி இணையதளம் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டது. இதன்படி, ஜனவரி 13 ஆம் தேதி பயணத்துக்காக இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது.

தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுதினம் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு தேதிகளுக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. இதுவும் விரைவில் விற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் முழுமையாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதால் பொங்கல் பண்டிகை ஒட்டி கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன் வரவேண்டுமென பயணிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

– பரசுராமன்.ப

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.