வைகோவைப் பற்றி அவதூறுகள்-துரை வைகோ கவலை

கடந்த 3 ஆண்டுகளாக வைகோவை பற்றி அவரால், வளர்க்கப்பட்டவர்கள், வளர்க்கப்படுகின்றவர்கள் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்று மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ கவலை தெரிவித்தார். தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின்…

கடந்த 3 ஆண்டுகளாக வைகோவை பற்றி அவரால், வளர்க்கப்பட்டவர்கள், வளர்க்கப்படுகின்றவர்கள் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்று மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ கவலை தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா கலையரங்கத்தில் மதிமுக சார்பில் நடைபெறும் பிறந்த நாள் விழாவில், மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பங்கேற்று பேசியதாவது:

56 ஆண்டு காலம் தமிழகத்திற்குகாக தமிழக மக்களுக்காக தனது வாழ்கையை அர்ப்பணித்தவர் வைகோ. சிறைவாசம், 5 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம், கணக்கிலடங்கா போராட்டங்கள் இவைகள் தான் அவரின் வரலாற்றுச் சுவடுகள்.

இதை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில்தான் மாமனிதன் வைகோ ஆவணப்படம் எடுத்தேன். இது என் 7 ஆண்டு கால கனவு. 3 ஆண்டு கால முயற்சி. ஒரு ஆண்டு கால உழைப்பு.

கடந்த 3 ஆண்டுகளாக வைகோவை பற்றி அவரால், வளர்க்கப்பட்டவர்கள், வளர்க்கப்படுகின்றவர்கள் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். சுமார் 8 மாத காலங்களாக அந்த விஷக் கணைகள் என் மீது பாய்கின்றது. தலைவரை விட்டுவிட்டு என் மீது விஷக் கணைகள் பாய்வது மகிழ்ச்சி தாம் எனக்கு, அதை நான் தாங்கி கொள்வேன்.

கொரோனாவால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் 3 வருடங்களாக இந்த இயக்கத்திற்காக என் சொத்துகளை விற்றுள்ளேன். கடந்த ஆண்டு நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில், 2 இடங்களை தவிர அனைத்தையும் திமுக கைப்பற்றியது. மீதமுள்ள 2 இடங்களில் எதிர்க்கட்சி அதிமுக ஒரு இடத்தை கைப்பற்றியது. மீதமுள்ள ஒரு இடத்தை கைப்பற்றியது காங்கிரசோ, பொதுவுடமை காட்சிகளோ விசிகவோ அல்லது பாமகவோ அல்ல மதிமுக.

அந்த வெற்றி இந்த இயக்கத்திற்காக, இயக்க தலைமைக்காக, இந்த வெற்றிக்கு தலைமையிடமோ இயக்கத்திடமோ யாரிடமும் ஒரு உதவியும் கேட்கவில்லை எனது சொத்துக்களை விற்று வெற்றியை குவித்தேன் என்றார் துரை வைகோ.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.