முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் பண்டிகை; நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, நாளை முதல் 13-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தினசரி இயக்க கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு 10 ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் பிற ஊர்களிலிருந்து 6 ஆயிரத்து 468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16 ஆயிரத்து 768 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

கோயம்போடு பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நலன் கருதி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.நடைமுறையில் உள்ள இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் பயணம் செய்யுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சாமிக்குத் தடுப்பூசி ஆகாது

Halley Karthik

கமல்ஹாசனுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி!

Halley Karthik

மியான்மரில் மண் சரிந்து விபத்து: 70 தொழிலாளர்கள் மாயம்

Arivazhagan CM