முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு; இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று 13,990 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,14,276 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 13,990 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,14,276 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 2,547 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27,14,643 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 62,767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,866 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 6,190 பேருக்கும் செங்கல்பட்டு 1,696 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நயன்தாராவின் மாய நிழல் ட்ரெய்லர் வெளியீடு

Saravana Kumar

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Halley Karthik

கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!

Gayathri Venkatesan