பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்டில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன் படி இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் ரொக்கப்பரிசாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், 2.25 கோடி குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசை விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
சென்னை, திருநெல்வேலி உள்பட தமிழ் நாடு முழுவதும் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.
கூட்டுறவு ,மகளிர் சுய உதவி குழு, தமிழ்நாடு வாணிப கழகக் கடைகள் மற்றும் இலங்கை தமிழர் ஆகிய அனைவருக்கும் இப்பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
அரசு சார்பில் ஜனவரி 8 முதல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.







