அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழர் திருநாளான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் இருப்போருக்கும் தமிழ்நாடு…

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழர் திருநாளான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் இருப்போருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறக்கூடிய 2 கோடிய 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பரிசுத் தொகுப்பினை இடைநில்லாது தொடர்ந்து விநியோகம் செய்திட வசதியாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 7-ஆம் தேதியன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.