பொங்கல் பரிசுத் தொகுப்பு: என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளது?

இன்று முதல் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளன என்பதை தெரிந்துகொள்வோம். பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி, 20 பொருட்கள் அடங்கிய…

இன்று முதல் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளன என்பதை தெரிந்துகொள்வோம்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி, 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில்,
1. பச்சரிசி
2. வெல்லம்
3. முந்திரி
4. திராட்சை
5. ஏலக்காய்
6. பாசிப் பருப்பு
7. நெய்
8. மஞ்சள் தூள்
9. மிளகாய் தூள்
10. மல்லித் தூள்


11. கடுகு
12. சீரகம்
13. மிளகு
14. புளி
15. கடலைப் பருப்பு
16. உளுத்தம் பருப்பு
17. ரவை
18. கோதுமை மாவு
19. உப்பு
20. கரும்பு, ஆகிய பொருட்கள் துணிப்பையில் வழங்கப்பட உள்ளது.

பரிசுத் தொகுப்பினை இடைநில்லாது தொடர்ந்து விநியோகம் செய்திட வசதியாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 7-ஆம் தேதியன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.