முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைத்து ரேஷன் கடைகளிலும் 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை நாளை மறுநாள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதுமுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு வரும் 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத்தை வரும் 4-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது.

மேலும், பரிசுத் தொகுப்பினை இடைநில்லாது தொடர்ந்து விநியோகம் செய்திட வசதியாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 7-ஆம் தேதியன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை கைது செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன்

Web Editor

பணிப்பெண் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்

EZHILARASAN D

சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே மோதல் – சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

Web Editor