முக்கியச் செய்திகள் இந்தியா

சிறார்களுக்கு தடுப்பூசி; 40 லட்சத்தை கடந்தது

கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வரும் நிலையில், 15-18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் நாளான இன்று 40 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1 லட்சத்து 45 ஆயிரத்து 582 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், கடந்த 24 மணிநேரத்தில், 33 ஆயிரத்து 750 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 123 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புதிதாக 12,160 கொரோனா பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 52,422 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிகரித்து வரும் தொற்றைக் கட்டுப்படுத்த ஜன.3 முதல் 15-18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து இன்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று மட்டும் 40 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதாவது, “கொரோனா தொற்றுக்கு எதிராக நமது இளைஞர்களை பாதுகாப்பதில் இன்று நாம் ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளோம். இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். இனி வரும் நாட்களில் இளைஞர் முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருச்செந்தூர் தொகுதியில்: திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

Halley Karthik

சமீபத்தில் பாஜகவில் இணைந்த சூர்யா சிவா கைது

Arivazhagan Chinnasamy

மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்த திமுக கவுன்சிலர் ஆடியோ வைரல்

Web Editor