தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நேற்று ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அதிகபட்சமாக சென்னையில் 876 பேருக்கும், செங்கல்பட்டில் 158 பேருக்கும், கோவையில் 105 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 364-ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 662 பேர் குணமடைந்ததகவும், சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.








