பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இன்று டெல்லி பயணம்!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கின்றனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் தொடர்ந்து 3 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பெரும்பாலான அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் பொங்கள் பண்டிகை களைகட்டி வருகிறது. இதற்கிடையே, நாளை (ஜன.14) டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்தாண்டு டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதற்கு முந்தைய ஆண்டு, அதாவது 2024 ஆம் ஆண்டு டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அந்த வகையில், நாளை நடைபெறும் பொங்கல் விழாவில், பிரதமர் மோடியுடன் இணைந்து தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பார்கள் எனத்தெரிகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இன்று டெல்லி செல்ல உள்ளனர். இந்த விழாவில் மத்திய அமச்சர்கள், பாஜக தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.