பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது.  அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன் பதிவு ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவது வழக்கம்.  அந்த வகையில் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம்…

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. 

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன் பதிவு ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவது வழக்கம்.  அந்த வகையில் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.  இந்த நிலையில், 13-ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

இதையும் படியுங்கள்: மிகவும் மோசமான நிலையில் டெல்லி – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!

தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி (ஞாயிற்று) போகி பண்டிகை தொடங்கி,  ஜன. 15-ம் தேதி பொங்கல்,  16-ம் தேதி மாட்டுப்பொங்கல்17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, 13-ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக,  அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்கியது.  அரசு போக்குவரத்து கழகத்தின் http://www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.