முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறு அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட வேண்டாம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு
பதட்ட நிலையை அரசியல் கட்சித் தலைவர்கள் உருவாக்க வேண்டாம் என அமைச்சர் மா.
சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி
ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள்
கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை, குறும்படத்தை
இணைந்து வெளியிட்டு ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப்
சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் மேடையில் பேசிய சென்னை மேயர் பிரியா  கூறியதாவது:
மாணவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆசிரியரும் ரோல் மாடலாக இருப்பார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி
வழங்குகிறோம் என்ற நோக்கில் இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிட்டுள்ளோம்.

தலைமை பொறுப்பு, முடிவு எடுத்தல் உள்ளிட்டவற்றை மாணவர்களிடம் வளர்க்க
பள்ளிகளில் மாணவர்கள் நான்கு குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் எண்ணங்களை வண்ணம் ஆக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிறந்த திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார் மேயர் பிரியா.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி
தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். 3 நாட்களில் சரி ஆகிவிடும்
காய்ச்சலுக்கு எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும்.

குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால், முதலில் அரசு தான் நிற்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை. மேலும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்ற நிலையை உருவாக்க வேண்டாம் என்றார் மா.சுப்பிரமணியன்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’தளபதி’ ஸ்டைலில் ஆற்றில் மிதந்து வந்த ’கங்கா’!

Gayathri Venkatesan

கனமழை எதிரொலி; ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Halley Karthik

கொரோனா பரிசோதனைக்கு ரூ.40 லட்சமா? அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்

EZHILARASAN D