திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் இன்று 68ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிகாலை முதலே, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மற்றும் நிர்வாகிகள் பலர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்ற ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, “69ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் ஸ்டாலின் விரைவில் முதலமைச்சராக வந்து பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்” என்றார்.
அதையடுத்து சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்கு கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் தாயாரிடம் ஆசி பெற்றார்.
ஸ்டாலினிடம் தொலைப்பேசி வயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது ட்விட்டரல், ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழத்துகளை தெரிவித்த அவர், நல்ல ஆரோக்கியத்துடனும் அதிக மகிழ்ச்சியோடும் ஸ்டாலின் இருக்க வாழ்த்துவதாக கூறினார்.